சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் கபடியில் சம்பியன்!

Friday, May 4th, 2018

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடியில் பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி சம்பியனானது.

நேல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 40:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.

Related posts: