சகீப் அல் ஹசன் இரட்டைச்சதம்: வலுவான நிலையில் வங்கதேசம் !

வெலிங்டனில் நேற்று (12) ஆரம்பமான நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகளை இழந்து 542 ஒட்டங்களை பெற்றுள்ளது.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 154 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி எடுத்திருந்தது.வங்கதேச அணி முதல் நாளின் ஆரம்பத்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரரான இம்ருல் கெய்ஸ் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இதை தொடர்ந்து தமிம் இக்பாலுடன் இணைந்த மோமினுல் நிதானமாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய தமிம் இக்பால் 50 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா 24 ரன்களில், வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.
40.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழந்த நிலையில் 154 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், மழையின் குறுக்கீடு காரணமாக முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டது.
இந்நிலையில் இன்றைய (13) இரண்டாம் நாள் ஆரம்பத்தில், மோமினுல் 64, ஷகிப் அல் ஹசன் 05 ஓட்டங்களுடன் களமிறங்கினர். மோமினுல் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து களமிறங்கிய முஸ்பிகுர் ரஹீம் – சகீப் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதிரடியாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 276 பந்துகளில் 217 ஓட்டங்களை குவித்தார். அதன் அடிப்படையில் பங்களாதேஷ் அணி சார்பில் இரட்டைச் சதம் பெற்ற மூன்றாவது வீரர் எனும் பெருமையை அவர் தன் வசப்படுத்தினார்.
இதற்கு முன்னர் முஸ்பிகுர் ரஹீம் (2013, இலங்கைக்கு எதிராக) தமீம் இக்பால் (2015, பாகிஸ்தானுக்கு எதிராக) ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் அணி சார்பில் இரட்டைச் சதங்களை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்பிகுர் ரஹீம் 159 ஓட்டங்களை பெற்றதுடன், சகீப் அல் ஹசன் 217 ஓட்டங்களைப் பெற்றார். இருவரும் இணைந்து 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 359 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்த இருவரின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக தடுமாறியதை காணக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் இரண்டாவது நாள் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 542 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|