கெயிலின் அதிரடி ஆட்டம்: உற்சாகத்தில் பிரீத்தி!

Saturday, April 21st, 2018

கெயிலை ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவாக்கே எடுக்கச் சொன்னதாக கூறப்படுகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது மேற்கிந்திய தீவு வீரரான கெய்லை எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் போட்டி போட்டன.

அதன் பின் கொல்கத்தா, பெங்களூரு என்ற அணிகளுக்கு விளையாடிய கெய்லை இந்தாண்டிற்கான ஏலத்தில் எந்த அணிகளும் எடுக்க முன் வரவில்லை.

அவருடைய வயது மற்றும் மோசமான பார்மின் காரணமாக எந்த ஒரு அணியும் எடுக்க முன் வரவில்லை. ஆனால் கடைசி கட்டத்தில் பஞ்சாப் அணி அவரை எடுத்தது.

பஞ்சாப் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமே கெய்ல்தான், கடந்த போட்டியில் சதம் அதற்கு முன்னர் அதிரடி என பழைய கெயிலை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் யாரும் சீண்டாத கெயிலை பஞ்சாப் அணி எடுப்பதற்கு முக்கிய காரணம் சேவாக் தானாம், கண்டிப்பாக கெயில் நமக்கு உதவுவார் என்று சேவாக் தான் எடுக்க வற்புறுத்தினாராம் அதன் பின்னரே பிரீத்தி அவரை ஏலத்தில் எடுக்க ஒப்புக் கொண்டாராம்.

இப்போது கெயிலை எடுத்தற்கான பலன் கிடைத்து வருவதால், பிரீத்தி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறராராம்.

Related posts: