கென்யாவின் மரத்தன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு 4 வருட போட்டித்தடை!

Friday, October 28th, 2016

ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மரத்தன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட போட்டித்தடையை விளையாட்டுத்துறை நீதிமன்றம் 4 வருடங்களுக்கு நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ஜெப்டோ, 2014 ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்தியமை உறுதியாகியதை அடுத்து, அவருக்கு 2 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டது.மேலும், 2014 ஆம் ஆண்டு அவருக்குக் கிடைக்கப்பெற்ற பொஸ்டன் மற்றும் சிக்காக்கோ மரத்தன் ஓட்டப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

jeptoo-rita-103114-620

Related posts: