குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்!!
Wednesday, February 28th, 2018கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக்ஸ்பெல்மேனை எதிர்கொண்டார்.
இதில் 31 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சந்தோசத்தில் போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென தலையில் வலி மயங்கி விழுந்து. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் ஸ்காட் வெஸ்ட்கார்த்பரிதாபமாக உயிரிழந்தார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பேட்டியளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென சரிந்து உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Related posts:
13வயதுப் பிரிவு துடுப்பாட்டத்தில் சென்.ஜோன்ஸ் தேசியச் சம்பியன் !
ஈரானில் காற்பந்து போட்டிகளைப் பார்வையிடச் சென்ற பெண்கள் கைது!
ஓய்வுபெற்ப் போவதில்லை - டு பிளிசிஸ் !
|
|