குடிக்க நீரின்றி உயிரிழந்திருப்பேன்: ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை சந்தித்த அவலம்!

Tuesday, August 23rd, 2016

நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் மகளிர் மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஓ.பி.ஜெய்ஷா, சரியான இடைவெளியில் தனக்கு குடிநீர் கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கின் மகளிர் மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் ஓ.பி.ஜெய்ஷா கலந்துகொண்டார். இந்த போட்டியில் பந்தய தூரமான 42 கி.மீ. தூரத்தை 2 மணி 47 நிமிடம் 19 விநாடிகளில் கடந்து 89 ஆவது இடத்தைப் பிடித்தார்.

மாராத்தான் போட்டியின் போது ரியோ ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சரியான இடைவெளியில் தனக்குக் குடிநீர் கூட வழங்கவில்லை என்றும், மற்ற நாடுகளின் வீராங்கனைகளுக்காக 2 கி.மீ. இடைவெளியில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்கள் காலியாக இருந்ததாகவும் அவர் குறைகூறியிருக்கிறார்.

மேலும், போட்டி நடந்த நேரம் கடும்வெயில் நேரம் என்பதால் தாகத்தால் தான் இறந்து விடும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் ஓ.பி.ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

Related posts: