கிரிக்கட் ஆட்ட நிர்ணயம்: வெளியாகது அதிர்ச்சி தகவல்!

Monday, October 22nd, 2018

கிரிக்கட் ஆட்டநிர்ணயங்கள் தொடர்பில் அல் ஜசீரா செய்தி சேவை சர்ச்சைக்குரிய வெளிப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

அனில் முணாவர் என்ற இந்திய சூதாட்டகாரரால் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிரிக்கட்ட ஆட்ட நிர்ணயங்கள் தொடர்பிலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அனில் முணாவர் என்ற சூதாட்டகாரர், இந்திய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா லக்ஸ்மிபதி பாலாஜி மற்றும் அனில் முணாவரின் உதவியாளர் ஒருவரும் இதில் அடங்கியுள்ளனர்.

குறித்த வீரர்கள் சூதாட்டகாரர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததாக அல் ஜசீரா செய்தி சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் ஆட்ட நிர்ணயங்கள் இடம்பெற்ற போட்டிகளையும் அந்த செய்தி சேவை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 2012 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் போது இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியும் அடங்கியுள்ளது.

ஆட்ட நிர்ணயங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போட்டிகளின் பட்டியில் பின்வருமாறு.

1.அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி (21.01.2011)

2.அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ௲ உலக கிண்ண தொடர் (21.02.2011)

3.இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி – உலக கிண்ண தொடர் (22.02.2011)

4.அவுஸ்திரேலியா மற்றும் கென்யா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி – உலக கிண்ண தொடர் (13.03.2011)

5.இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி – உலக கிண்ண தொடர் (06.03.2011)

6.இங்கிலாந்து மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி – உலக கிண்ண தொடர் (11.03.2011)

7.இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி (21-25.07.2011)

8.தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி (09-11.12.2011)

9.அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி (09-12.12.2011)

10.இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி (17-19.01.2012)

11.இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி (25-28.01.2012)

12.இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 903-06.02.2012)

12.இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டி – இருபதுக்கு 20 உலக கிண்ண தொடர்௲ (18.09.2012)

14.இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டி – இருபதுக்கு 20 உலக கிண்ண தொடர் (21.09.2012)

15.தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டி – இருபதுக்கு 20 உலக கிண்ண தொடர் (28.09.2012)

Related posts: