கழற்றிவிடப்படார் லியாண்டர் பயஸ்!

Wednesday, August 16th, 2017

இந்தியாவின்  பிரபல டென்னிஸ் வீரா் லியாண்டர் பயஸ், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய மற்றும் கனடா அணிகள் மோதிக்கொள்ளும் டேவிஸ் கிண்ணத் டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய டென்னிஸ் வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலில் முன்னிணி வீரர் லியாண்டர் பயஸின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

டேவிஸ் கிண்ணத்திற்காக, யுகி பாம்பரி, சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன், ரோஹன் போபண்ணா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, மாற்று வீரர்களாக பிராணேஷ் குணேஷ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோரின் பெயர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts: