கன்னி போட்டியில் ஹெட்ரிக் சாதனை !

Tuesday, July 4th, 2017

இலங்கை மற்றும் சிம்பாவேயிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் அறிமுகமான வனிது ஹஸரங்கா கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.

அறிமுக போட்டியிலே வனிது ஹஸரங்கா மூன்று விக்கெட்டுக்களை ஹெட்ரிக் முறையில் பெற்றதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலே ஹெட்ரிக் எடுத்த மூன்றாவது வீரராக பெயர் பதித்துள்ளார்.

 

இதற்கு முன்னதாக பங்களாதேஷ் அணியின் தையூல் இஸ்லம் மற்றும் தென்னாபிரிக்க அணியின் கஜிஸோ ரபாடா ஆகியோர் அறிமுக போட்டியிலே ஹெட்ரிக் எடுத்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகலத்துறை ஆட்டக்காரரான வனிது ஹஸரங்கா 19 வயதுடையவர் என்பதுடன்,லஹிரு மத்துஷங்கவிற்கு பதிலாக இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டார்.

Related posts: