கண்களை தானம் செய்வதாக அஸ்வின்  தெரிவிப்பு!

1-22 Tuesday, January 10th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இவர் கடந்த ஆண்டின் மிகச் சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற இரண்டு ஐ.சி.சி விருதுகளுக்கு தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில், ராஜம் கண் மருத்துவமனையில் நடந்த கண் தானம் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற அஸ்வின், தன் கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது, கண்தானம் செய்வது என்பது எனது மனைவி ப்ரீத்தியின் கனவு. ஒவ்வொரு குடிமகனும் இதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள் என்று அஸ்வின் தனது விழிப்புணர்வு பிரசாரத்தில் ரசிகர்களிடம் வற்புறுத்தி உள்ளார்.

1-22


தென்ஆபிரிக்கா கிரிக்கெட் வாரிய விருது வழங்கும் விழா:  கரீபியன் தொடரில் இருந்து டி வில்லியர்ஸ், ஸ்டெய...
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான 20 ஓவர் போட்டிக்கு அனுமதி!
நிக் லீ இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமனம்!
கோலியை பாராட்டிய ஜெயசூர்யா!
ஜெயவர்த்தன, டெய்லர் வானவேடிக்கையில் சென்ரல் அணி அபார வெற்றி!