ஓய்வை அறிவித்தார் சிம்பாப்வே அணி வீரர் சோலமன் மைர்!

Tuesday, July 23rd, 2019

சிம்பாப்வே கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சோலமன் மைர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அரசியல் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக சர்வதேச கிரிக்கட் பேரவையினால் சிம்பாப்வே கிரிக்கட் பேரவைக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த தடையை அடுத்து சிம்பாப்வேயின் கிரிக்கட் வீரர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தநிலையில் சோலமனை தொடர்ந்து மேலும் பலரும் தங்களது ஓய்வை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: