ஓய்வு குறித்து யோசிக்க வேண்டும் – மிஸ்பா உல் ஹக்!

Wednesday, December 7th, 2016

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவரான மிஸ்பா உல் ஹக், டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவது குறித்த முடிவை இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனது முடிவு, தனது தனிப்பட்ட முடிவாகவே இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரலில் கருத்துத் தெரிவித்திருந்த மிஸ்பா, அவுஸ்திரேலியாவுக்கெதிராக இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தொடருடன் ஓய்வு பெறுவது குறித்துச் சிந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது 42 வயதான மிஸ்பா, தனக்கு வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஓய்வு பற்றி தான் சிந்திப்பதாகத் தெரிவித்த மிஸ்பா, ஆனால் அது தொடர்பில் முடிவெதனையும் இன்னும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

தன்னுடைய சிந்தனை முழுவதும், அணியைப் பற்றியதாகவே இருக்கிறது எனத் தெரிவித்த மிஸ்பா, தானின்றி இந்த அணியால் முன்செல்ல முடியுமா என்று சிந்திப்பதாகவும் தெரிவித்தார்.

“பொறுப்பை ஏற்றுக் கொண்டு திறமையை வெளிப்படுத்தும் திறமை, தற்போதைய வீரர்களுக்குக் காணப்படுகிறது என நான் நம்புகிறேன். ஆகவே நான், இந்தத் தருணத்தில் விலகினால் சரியானதாக இருக்குமா என எண்ணுகிறேன்” என்றார்.

தான் எடுக்கும் முடிவு குறித்து, தொடருக்கு முன்னரேயே எடுக்கப்பட வேண்டுமென்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்த அவர், அந்த முடிவை, தான் தனியாகவே எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

misbah

Related posts: