ஐ.பி.எல் தொடர்: ஏலம் போகாத பிரபல வீரர்கள்!
Tuesday, February 21st, 2017ஐபிஎல் 10-வது சீசனுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 359 வீரர்கள் ஏலத்துக்கு விடப்படுவர். ஆனால், அதிகபட்சமாக 78 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவர்.
ஐபிஎல் ஏலத்தில் இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான், உன்முக்சந்த், புஜாரா, ப்ரக்யன் ஓஜா உள்ளிட்ட இந்தியாவின் பிரபல வீரர்களை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை. இதேபோல இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பையர்ஸ்டோவ், நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர், காலின் மன்ரோ, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஜான்சன் சார்லஸ், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாஹிர், வைன் பார்ன்ல் ஆகியோரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக எந்த ஒரு வெளிநாட்டு வீரரையும் இவ்வளவு வலைகொடுத்து ஏலம் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|