ஐ.பி.எல் தொடரிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!

Monday, February 6th, 2017

 

இந்திய உள்ளூர் அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர துடுப்பாட்டகாரர் கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார்.

36 வயதான பீட்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் பிக் பாஷ் லீக் உட்பட பல்வேறு லீக் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. கடந்த சில மாதங்களாக பிக் பாஷ் லீக் உள்ளிட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தேன்.

அதற்காக தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டிருந்தேன். அதனால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐபில் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் புனே அணியில் இடம்பெற்ற பீட்டர்சன் 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக விலகினார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் எதிர்வரும் பிப்ரவரி 20ம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

kevin-pietersen

Related posts: