ஐ.சி.சி.யால் மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ்: தென்ஆபிரிக்கா – அயர்லாந்து போட்டியில் அறிமுகம்!

Saturday, September 24th, 2016

ஐ.சி.சி. மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ். விதிமுறை நாளை (25) நடக்கும் தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்கள் நடத்தை மற்றும் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையில் மாற்றங்களை செய்து அறிவித்து உள்ளது.

விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கை, அபராதம் மற்றும் சஸ்பெண்ட் ஆகிய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தற்போது விதிமுறைகளை வீரர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு வீரரும் ‘ஜீரோ’ புள்ளியுடன் கணக்கு ஆரம்பிக்கும். குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் சென்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முறை நேற்றுமுன்தினம் முதல் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதே போல் டி.ஆர்.எஸ். முறையிலும் மாற்றம் செய்துள்ளது. எல்.பி. டபிள்யூ ஆட்டமிழப்பு தர நடுவர் மறுத்தால் டி.ஆர்.எஸ். முறையில் அவரது முடிவை எதிர்த்து மறுபரிசீலனைக்கு செல்லலாம். இதில் முன்னர் பந்து துடுப்பாட்டவீரரின் கால் மற்றும் ஸ்டம்பை தாக்கும் விதியில் சில மாற்றங்களை செய்து அறிவித்து உள்ளது.

இந்த விதிமுறை நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்கா – அயர்லாந்து மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து அமுல் ஆகிறது.

03col123504065_4796566_23092016_aff

Related posts: