ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அச்சம் !

ஐ.சி.சி. உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
நிவ்யோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து குறித்த அச்சம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ISISற்கு ஆதரவான குழுவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஒரு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வரைபடம் முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது.
அத்துடன் “நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தினத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும் தம்மிடம் வலுவான பாதுகாப்பு திட்டங்கள் உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|