உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான அணிகள் அறிவிப்பு!

Sunday, December 3rd, 2017

2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான 32 அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷியாவில் அடுத்தாண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதிவரை இடமபெறவுள்ளது

இந்த நிலையில், உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டனஇதற்கமைய, குழு ஏ யில் ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியாவும், குழு பி யில் போர்த்துக்கல், ஸ்பெயின், ஈரான், மொராக்கோவும்,

குழு சி யில் பிரான்ஸ், பெரு, டென்மார்க், அவுஸ்திரேலியாவும்,குழு டி யில் ஆர்ஜெண்டீனா, குரோசியா, ஐஸ்லாந்து, நைஜீரியாவும் இடம் பிடித்துள்ளன.

குழு ஈ யில் பிரேஸில், சுவிட்சர்லாந்து, கோஸ்டரிக்கா, செர்பியாவும்,குழு எவ் வில் ஜேர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென் கொரியாவும்,குழு ஜி யில் பெல்ஜியம், இங்கிலாந்து, டுனிசியா, பனாமாவும், குழு எச் இல் போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான் முதலான நாடுகளும் இடம்பிடித்துள்ளன.

Related posts: