உலகக் கிண்ண கால்பந்து தகுதிகான் தொடர்: இலங்கை தோல்வி !

Saturday, June 8th, 2019

2022 ஆம் ஆண்டு ஃபீபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகான் போட்டிகளின் முதலாவது சுற்றில் மக்காவு (Macau) அணியிடம் 1க்கு 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

மெக்காவ் அணியின் ஃப்லிப் டுஹார்டினால் குறித்த கோல் அடிக்கப்பட்டுள்ளது.இதனூடாக, உலகக் கிண்ண கால்பந்து தொடருக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பு மெக்காவ் அணிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்தாட்ட தரவரிசையில் மெக்காவு அணி 183 ஆவது இடத்திலும், இலங்கை அணி 202 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: