உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடத்த எதிர்ப்பு!

Thursday, May 24th, 2018

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொஸ்கோபல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ரஷ்யாவில் அடுத்த மாதம் 14 ஆம் திகதி உலகக் கிண்ண உதைபந்தாட்டம் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. உலகக் கிண்ண உதைபந்தாட்டம் போட்டிகள் அடுத்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து, ஜூலை 15 ஆம்திகதி வரை நடைபெறவுள்ளது.

ரஷ்யாவின், 11 நகரங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டி தொடரில்மா சுமார் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த நிலையில், போட்டிகள் நடத்தப்படவுள்ள மொஸ்கோ உதைபந்தாட்டம் மைதானத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உலகக் கிண்ண போட்டிகள் நடத்தப்படும் காலப்பகுதியில் தமக்கான பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக மாணவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக வளாகம் உள்ள பகுதியில் உதைபந்தாட்டம் மைதானம் அமைந்துள்ளதால் பரீட்சைகளுக்கு அது இடையூறாக அமையும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அந்த பகுதியில் பார்வையாளர்களுக்கான வலயம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு வருவதும் தம்மைமேலும் எரிச்சல் அடைய செய்துள்ளாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு புதிய பார்வையாளர்களுக்கான வலயத்தை அமைப்பதற்காக பயன்தரு மரங்கள் சில தறிக்கப்படுவதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: