உலகக்கிண்ண தொடரில் இருந்து யுவராஜ் சிங் விலகல்!

Thursday, March 31st, 2016

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் காயமடைந்த யுவராஜ் சிங் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது யுவராஜ் சிங்கிற்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து அந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாடினார். போட்டி முடிந்த பிறகு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏதுமில்லை என்றாலும் நீர்க்கட்டிகள் காணப்பட்டன.

நாளை நடக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கு முன்பு அவரால் உடற்தகுதி பெற முடியாது என்பதால் அவர் உலகக்கிண்ணத்தில் இருந்து விலகியுள்ளார்.

இந்த உலகக்கிண்ணத் தொடரில் யுவராஜ் (4,24,3,21) பெரிதாக சொபிக்கவில்லை என்றாலும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழப்பை தடுத்து நிறுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

நடுவரிசையில் அனுபவ வீரரான யுவராஜ்சிங் தொடரில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.இவருக்கு பதிலாக மணீஷ் பாண்டே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Related posts: