உலகக்கிண்ண கால்பந்து : செனகல் அணி வெற்றி!

Monday, November 13th, 2017

உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் செனகல் அணி வெற்றி பெற்று உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில், செனகல் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்க்கொண்டது.

இந்தபோட்டியில் 2க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் செனகல் அணி வெற்றிபெற்றது.

அடுத்த உலக கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் அடுத்த வருடம் ஜூன் – ஜூலை மாதங்களில் நடைப்பெறவுள்ளது

இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றதுடன், போட்டியை நடத்தும் ரஷியா நேரடியாக தகுதி பெற்றது.

ஏனைய 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தெரிவுசெய்யப்படும்.

தற்போது அதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன

இதுவரை 24 நாடுகள் தகுதி பெற்றுள்ளதுடன், இன்னும் 8 நாடுகள் தகுதி பெற வேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: