உலகக்கிண்ணத் தொடர் – ஆப்கான் நட்சத்திர வீரர் பரபரப்புக் குற்றச்சாட்டு!
Tuesday, June 11th, 2019உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர், தனக்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் விக்கெட்கீப்பரும், நட்சத்திரவீரருமான மொகமது ஷசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில், உலகக்கோப்பை தொடலிருந்து மொகமது ஷசாத் காயம் காரணமாக விலகினார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மொகமது ஷசாத் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார், நான் விளையாடத் தகுதியான உடல்நிலையில் இருக்கும்போது எப்படி தகுதியிழப்புச் செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை. வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
முழங்காலில் இருந்த பிரச்சினை சரியாகிவிட்டது, நியூசிலாந்து போட்டிக்குத் தயாராகவே இருந்தேன். ஆனால் திடீரென நான் இல்லை என்ற அதிர்ச்சி அறிவிப்பு வருகிறது. ஒரு மூத்தவீரரை இப்படியா நடத்துவது? என்னை உடைத்து நொறுக்கிவிட்டார்கள் என மொகமது ஷசாத் புகார் எழுப்பியுள்ளார்.
ஆனால், ஷஸாத் கூறுவது முற்றிலும் தவறு. முறையான மருத்துவ அறிக்கை ஐசிசியிடம் அளிக்கப்பட்டுள்ளது என ஆப்கான் கிரிக்கெட்வாரிய தலைமைச் செயலாளர் அசாதுல்லாகானி கூறியுள்ளார்.
Related posts:
|
|