உசேன் போல்டுக்கு முதல் வெற்றி!

Tuesday, May 17th, 2016

உலகின் அதி­வேக ஓட்டப் பந்­தய வீர­ரான ஜமைக்­காவின் உசேன் போல்ட், கேமான் “இன்­வைட்­டே­ஷனல்’ போட்­டியில் 100 மீ. ஓட்­டத்தில் முத­லி­டத்தைப் பிடித்து 2016 ஆம் ஆண்டை வெற்­றி­யோடு தொடங்­கி­யுள்ளார்.

கரீ­பியத் தீவு­களில் ஒன்றான கேமான் தீவில் சனிக்­ கி­ழமை நடை­பெற்ற கேமான் “இன்­வைட்­டே­ஷனல்’ தட­க ளப் போட்­டியில் 100 மீ. ஓட்­டத்தில் பங்­கேற்ற உசேன் போல்ட் 10.05 விநா­டி­களில் இலக்கை எட்­டினார். அவருக்குஅடுத்­த­ப­டி­யாக அமெ­ரிக்காவின் டென்­டா­ரியஸ் லாக் 2-ஆவது இடத்தைப் பிடித்தார். அவர் இலக்கை எட்­டு­வ­தற்கு போல்ட்­டை­விட கூடு­த­லாக 7 மைக்ரோ விநா­டிகள் எடுத்­துக்­கொண்டார். மற்­றொரு ஜமைக்கா வீர­ரான கெமர் பெய்லி கோல் 3-ஆவது இடத்தைப் (10.18 விநா­டி­) பிடித்தார்.

இது எனது சிறந்த ஓட்டம் அல்ல. எனினும் காயம் எது­வு­மின்றி இலக்கை எட்­டி­யி­ருப்­பது முக்­கி­ய­மா­ன­தாகும் என்று வெற்றி குறித்து உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

Related posts: