இலங்கை ரி20 அணியில் மாற்றம்!

Wednesday, January 26th, 2022

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை அணி சிட்னி மைதானம், மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் ஐந்து சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி பிப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட அணி பெயரிடப்பட்டுள்ளது.

பிரதித் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தனுஷ்க குணதிலகவும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு

தசுன் ஷானக (தலைவர்)

சரித் அசலங்க (பிரதி தலைவர்)

அவிஷ்க பெர்னாண்டோ

பெத்தும் நிசங்க

தனுஷ்க குணதிலக்க

குசல் மெண்டிஸ்

தினேஷ் சந்திமால்

சாமிக்க கருணாரத்ன

ஜனித் லியனகே

கமில் மிஸார

ரமேஷ் மெண்டிஸ்

வனிந்து ஹசரங்க

லஹிரு குமார

நுவன் துஷார

துஷ்மந்த சமீர

பினுர பெர்னாண்டோ

மஹீஸ் தீக்ஷன

ஜெப்ரி வன்டர்சே

பிரவீன் ஜயவிக்ரம

ஷிரான் பெர்னாண்டோ

000

Related posts: