இலங்கை ரசிகர்களுக்கு நன்றி சொன்ன இந்திய அணித் தலைவர்!

Monday, March 19th, 2018

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர்.

அதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கை அணியின் கொடியை தூக்கி கொண்டு மைதானம் முழுவதும் சென்றுள்ளார்.

இந்த காட்சி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு இலங்கையர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர். இதனால் இலங்கை ரசிகர்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ரோஹித் ஷர்மா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

கிரிக்கெட் என்பது ஜென்டில்மென் விளையாட்டு என கூறப்படுவதனை இந்திய அணி உறுதி செய்துள்ளதாக பலர் கூறியுள்ளனர்.அத்துடன் தனது நன்றி உரையிலும் இலங்கை ரசிர்களுக்கு தனது மனம் நிறைந்த நன்றியை ரோஹித் ஷர்மா வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது.

 

Related posts: