இலங்கை தொடருக்கும் ஆஸி தொடருக்கும் ஒற்றுமை உள்ளது என்கிறார் விஜய்!

Friday, March 3rd, 2017

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கும், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கும் ஒற்றுமை உள்ளதாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, இலங்கையில் முதல் போட்டியில் தோற்ற பிறகு தொடரை வென்றோம், நிச்சயமாக அதேபோல அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையும் வெல்வோம் என அவர் மேலும் கூறினார்.

புனேயில் நடந்த முதல் டெஸ்ட் தோல்வியின் தாக்கத்தால் இந்திய அணி வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதில் இருந்து மீண்டு வர, அணி வீரர்கள் 2 நாட்கள் ஓய்வில் மேற்குத்தொடர்ச்சியில் மலையேறியுள்ளனர்.

தோல்விக்குப் பிறகு சற்றே இளைப்பாறி யோசிக்க இத்தகைய பயணங்கள் உதவும் என்ற நோக்கத்தில் இந்திய வீரர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியாவுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டுமென்ற நோக்கத்தில் இந்திய வீரர்கள் கடும் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான திட்டம் குறித்து முரளி விஜய் கூறுகையில், ”2வது டெஸ்ட் போட்டியில் தன்னம்பிக்கையுடன் களமிறங்குவோம். அனைத்துக் பிடியெடுப்புகளையும் பிடிப்போம், எனது துடுப்பாட்ட உத்தி பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை, பெங்களூரில் தன்னம்பிக்கையுடன் களமிறங்குவோம்.

டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்தியதிலும் தவறு விட்டோம். அடுத்த முறை மறுபரீசிலனைக்கு முன்பாக இருக்கும் 15 விநாடிகள் நேரத்தை சரியான முறையில் நிதானித்து பயன்படுத்துவோம். புனே தோல்வி பற்றி பேசினோம், தவறு செய்த இடங்களை ஆராய்ந்தோம், இன்னும் எந்தவிதத்தில் முன்னேற்றம் தேவை என்பதை திட்டமிட்டுள்ளோம்” என கூறினார்.

48346076-720x480

Related posts: