இலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர் !

Friday, May 6th, 2016
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்­களுள் ஒரு­வரும், முன்­னிலை கபடி பயிற்றுநராக­வும் ­தி­கழும் துரைச்­சாமி மதன்சிங் ஆசிய கபடி சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை தேசிய கபடி குழாமில் இடம்­பெற்­றுள்ளார்.
2016 ஆம் ஆண்­டுக்­கான ஆசிய கபடி சுற்­றுப் ­போட்­டி­யா­னது இம்­மாதம் மே 2 முதல் 9ஆம் திகதி வரை பாகிஸ்­தானின் இஸ்­லா­மாபாத் நகரில் நடை­பெ­று­கி­றது.
இச்­சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­கொள்ளும் இலங்கை வீரர்கள் கடந்த திங்­கட்­கி­ழமை இலங்கையிலிருந்து புறப்­பட்டு சென்­றுள்­ளது.
இக்­கு­ழாமில் இடம்­பி­டித்­துள்ள ரி.மதன் சிங் ஒரே ஒரு தமிழ் வீரர் இவ­ராவார். சாண்டோ சங்கரதாஸ் விளை­யாட்டுக் கழ­கத்தின் மல்­யுத்த வீர­ரான இவர், மல்­யுத்த போட்­டி­க­ளிலும் தேசிய அளவில் பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Related posts: