இலங்கை – சிம்பாப்வே – மே.தீவுகள் முக்கோண கிரிக்கெட் தொடர்!

இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகள் பங்குகொள்ளவுள்ள முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து, சிரேஷ்ட வீரர்களான கெரன் பொலார்ட், டினேஷ் ராம்டின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த அறிவிப்பை, மேற்கிந்தியத் தீவுகளின் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் கோர்ட்னி ப்ரௌண், மின்னஞ்சல் மூலமாக விடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் குழாம், இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கெதிராக அண்மையில் இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், இவர்களிருவருமே, போதுமான திறமையை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
எனவே, பெறுபேறுகள் அடிப்படையிலான முடிவாகவே இது அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள இந்தத் தொடர், நவம்பர் 14ஆம் திகதி, இலங்கைக்கும் சிம்பாப்வேக்கும் இடையில் ஆரம்பிக்கவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|