இலங்கை சிங்கங்களின் பந்துவீச்சில் மண்டியிட்டது இந்தியா!

Sunday, December 10th, 2017

சுற்றுலா இலங்கை அணிக்கும் – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 113 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

தர்மசாலா மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 38.2 ஓவர்கள் நிறைவில் 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.இந்திய அணி சார்பாக மகேந்திர சிங் தோனி 65 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

இந்திய அணியின் மற்றைய அனைத்து வீரர்களும் 20 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றுக்கொண்டிருந்தனர். பந்து வீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.அவர் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா , கார்த்திக், பாண்டே மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இரண்டு விக்கட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ள நுவன் பிரதீப் , ஷிரியாஸ் ஐயர் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரின் விக்கட்டுக்களை வீழ்த்தினார்.ஏஞ்சலோ மெத்திவ்ஸ், திசர பெரேரா , தனஞ்சய மற்றும் பதிரண ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் பெற்றுக்கொண்டனர்.

Related posts: