இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை!

Friday, October 26th, 2018

இலங்கை – இங்கிலாந்து தொடரை நேரில் காணவந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு முறையான உரிமம் இல்லாமல் மது வழங்கிய தனியார் உணவு நிறுவனத்தின் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்தது.

இப்போட்டியை நேரில் பார்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு Classic Destination என்ற தனியார் நிறுவனம் உணவுகளுடன் சேர்த்து மதுபானங்களை வழங்கியது. இதையடுத்து அதிகாரிகள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள்.

மதுவை முறையான அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் மைதானத்தில் விற்பனை செய்த குறித்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் போட்டியை காண உள்ளூர் ரசிகர்களை விட இங்கிலாந்து ரசிகர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து எல்லோருக்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: