இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைவராக அரவிந்த!

Saturday, September 9th, 2017

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பதவியிலிருந்த சனத் ஜயசூரிய பொறுப்பிலிருந்து கடந்த 06 ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்தே, அரவிந்த டி சில்வா எதிர்வரும் 3 மாத காலத்துக்கு அப்பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.இதேவேளை, முன்னாள் இலங்கை அணியின் வீரர் ரொஷான் மஹானாமவும் இப்பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதற்கு முன்னரும் தெரிவுக் குழுவின் தலைமைப் பதவியை அரவிந்த டி சில்வா வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: