இலங்கை – இந்தியா மூன்றாவது டெஸ்ட்: ராகுல் – தவான் ஜோடி புதிய சாதனை

Sunday, August 13th, 2017

இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி, கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, ஆரம்ப நாளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இந்த போட்டியில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர், இலங்கை மண்ணில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக் கொண்ட அதிகூடிய இணைப்பாட்டத்தினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.இவ்விருவரும் இன்றைய போட்டியில், ஆரம்ப விக்கட்டுக்காக 188 ஓட்டங்களைப் பெற்று இந்த சாதனையினை நிலைநாட்டியுள்ளனர்.

இதற்கு முன்னர் இலங்கை மண்ணில் வெளிநாட்டு அணியொன்றின் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 171 ஓட்டங்களே பெறப்பட்டிருந்த்து.1993 ஆம்  இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்திய அணியின் ஆரம்ப  துடுப்பாட்ட வீரர்களான மனோஜ் பிரபாகர்  மற்றும் நவ்ஜோத்சிங் சித்து ஜோடி இந்த சாதனையை படைத்தது.

இந்திய அணியினால் படைக்கப்பட்ட அந்த சாதனை 24 ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய அணியினாலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.

Related posts: