இரண்டு தடவைகள் ஆட்டமிழந்த சந்திமால்! 

Thursday, March 16th, 2017

இரண்டு தடவைகள் ஆட்டமிழந்ததாக நடுவர் தெரிவித்த நிலையிலும் புதிய சாதனை ஒன்றினை தினேஸ் சந்திமால் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதே 8 ஆவது சதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாரா ஓவல் மைதானத்தில் மிக அதிக பந்துகளில் (44 பந்துகளில்) சதத்தினை பெற்றவர் என்ற சாதனையை தற்போது சந்திமால் தனதாக்கியுள்ளார்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய போது தனது முதலாவது இன்னங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதில் 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சந்திமால், 38 ஓட்டங்கள் பெற்ற நிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாகவும், 109 ஓட்டங்களை பெற்றபோதும் அட்டமிழந்ததாகவும் நடுவர் தீர்ப்பளித்தார்.

உடனேயே சந்திமால் மேற்கொண்ட மீள் பரிசீலனையில் அந்த ஆட்டமிழப்புக்கள் தவறு என தெரியவந்தது. இந்நிலையில் சந்திமால் குறித்த சாதனையினையும் தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: