இன்சமாமுற்கு ஒரு கோடி  பரிசு!

Sunday, July 9th, 2017

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக செயற்படும் இன்சமாம் உல் ஹக்கிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுவதனை எதிர்த்து பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் சம்பியன்ஸ் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அத்துடன் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாவும் தலைமை தேர்வாளர் இன்சாமாம் உல் ஹக்கிற்கு 1 கோடி ரூபாவும் ஏனைய தேர்வாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த பரிசு அறிவிப்பை முன்னாள் வீரர்கள் பலர் எதிர்த்துள்ளனர்.

அத்துடன் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கும் போது தலைமை தேர்வாளருக்கு ஒரு கோடி ரூபா கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் இக்பால் காசிம் தெரிவித்துள்ளார்.

Related posts: