இனிமேல் துப்பாக்கியை தொடமாட்டேன்- அபினவ் பிந்த்ரா!

Tuesday, August 9th, 2016

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த ஆடவர்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா பதக்க வாய்ப்பை கோட்டை விட்டார்.

அவர் 163.8 புள்ளிகள் பெற்று 4வது இடம் பிடித்தார். இதனால் விரக்தியில் துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.இவர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் தங்க பதக்கமும், காமன்வெல்த் போட்டிகளில் 4 முறை தங்கப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் தனிப்பட்ட வீரராக கலந்து கொள்ளும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர்.இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பு பறி போனது அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஏமாற்றமாக முடிந்தது.

இந்தப் போட்டிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், நான் இந்தப் போட்டியில் என்னுடைய திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்தினேன்.இருப்பினும் 4வது இடம் பிடித்து பதக்கத்தை இழந்தது சற்று வருத்தமளிக்கிறது.என்னுடைய எதிர்காலத்தை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக பொழுதுபோக்கில் கூட இனிமேல் துப்பாக்கியை தொட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Related posts: