இந்திய கிரிக்கட் அணிக்கு புதிய பயிற்சியாளர் எதிர்வரும் 10ஆம் திகதி தெரிவு!

Tuesday, July 4th, 2017

இந்திய கிரிக்கட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் எதிர்வரும் 10ஆம் திகதி தெரிவு செய்யப்படுவார் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளரை  தெரிவு செய்வதற்காக சச்சின் கங்குலி லட்சுமன் ஆகியோரை கொண்ட விஷேட குழுவை  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நியமித்துள்ளது. இந்த நிலையில் பயிற்சியாளரின் தெரிவு குறித்து கங்குலி கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ”புதிய பயிற்சியாளர்  தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி  மும்பையில் நடை பெறுகின்றது நேர்முக பரீட்சையில் அணியை முன்னேற்ற செயல் திட்டங்கள் அணுகுமுறைஇ போன்றவை குறித்து கேட்கப்படும் அதில் திருப்தியான  விதமாக பதில் அளிக்கும் ஒருவர் பயிற்சியாளராக தெரிவு செய்யப்படுவார்” என  தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே  விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகியிருந்தார்.

புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இதில் ஷேவாக் டாம்மூடி பால்சந்த் ராஜ்புத் ரிச்சர்ட் பைபஸ் தோடா கணேர் ஆகியோர் விண்ணப்பித்தனர். இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரியும் விண்ணப்பித்துள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 9ஆம் திகதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: