இந்திய அணி வெற்றி !

Monday, February 26th, 2018

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி ஏழு ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7   இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.பதிலளித்தாடிய 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 2 போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Related posts: