இந்திய அணியினை கதிகலங்க வைக்கக் காரணம் இந்திய வீரர் அஷ்வின் !

Monday, March 6th, 2017

இந்திய துடுப்பாட்டகாரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த அஸ்வின் தமது அணிக்கு கை கொடுத்ததாக அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லியான் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களுருவில் தொடங்கியது.

இதிலும் அவுஸ்திரேலிய சுழலில் இந்திய வீரர்கள் சொதப்ப முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லியான் 8 விக்கெட் சாய்த்து அசத்தினார்.

இதுகுறித்து லியான் கூறுகையில், நான் அஸ்வினின் வீடியோக்களை பார்த்தேன். அதில் இருந்து பல ஐடியாக்கள் கிடைத்தது. அதோடு நான் சுயமாக சிந்தித்து,அஸ்வினை விட கூடுதல் பவுண்சராகும் படி பவுலிங் செய்தேன்.

தவிர, துபாயில் இதற்காக கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். இப்படி பந்து வீச மட்டும் சுமார் 1200 பந்துகளை வீசினேன். அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

Related posts: