இந்திய அணிக்கு சிக்கல் – அணியில் நீடிக்கும் குழப்பம்!

Tuesday, July 2nd, 2019

உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு லீக் போட்டியில் கட்டயாமாக ஒரு போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடி நிலையில் இந்தியா உள்ளது.

வங்கதேச அணியுடன் மோதும் இந்தியா அணி, எதிர்வரும் யூலை 6ஆம் திகதி இலங்கை அணியுடன் மோத உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

இன்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் இந்தியாவை வெல்வோம் என்ற முழு நம்பிக்கையுடன் வங்கதேச அணி உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக தவான் விலகிய நிலையில் பந்த் அணியில் இணைந்தார். நேற்று தமிழக வீரரும், ஆல் ரவுண்டருமான விஜய் சங்கர் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் இந்திய அணியில் இணைய உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் காயம் காரணமாக மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியில் பந்த் அதே நான்காவது இடத்தில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. அதே சமயம் ஆல் ரவுண்டரும், அனுபவமிக்க வீரருமான ரவீந்தி ஜடேஜா விளையாடுவார் எனவும், ஜாதவ் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

Related posts: