இந்தியா- அவுஸ்திரேலியா தொடர்: ஸ்பாட் பிக்ஸிங் நடந்தது தொடர்பான  வீடியோ வெளியானது!

Monday, May 28th, 2018

இந்தியா-  அவுஸ்திரேலியா இடையே கடந்த 2017ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்ததாக ஆதாரத்துடன் அல் ஜஸீரா வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அல் ஜஸீரா வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு கட்டத்தில் இரண்டு அவுஸ்திரேலிய வீரர்கள் சூதாட்டக்காரர்களின் சொல்படி ஸ்கோர் எடுத்ததாகவும், பணத்திற்காக ஆடினார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீரர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பில் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் தலைவர் ஜேம்ஸ் சதல்லேண்ட் கூறுகையில், ஐசிசியுடன் இணைந்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

எடிட் செய்யப்படாத வீடியோ பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தப்படும், குற்றம் நிரூபணமானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts: