இந்தியக் அணி அறிவிப்பு!

Tuesday, September 13th, 2016

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையே இந்தியாவில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியின் டெஸ்ட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற டெஸ்ட் குழாமிலிருந்த 17 பேரில், சகலதுறை வீரர் ஸ்டூவர்ட் பின்னி, வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கர் ஆகியோரே குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குழாமில், புதிதாக எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 22ஆம் திகதி கான்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

குழாம்: விராத் கோலி (தலைவர்), அஜின்கியா ரகானே, இரவிச்சந்திரன் அஷ்வின், ஷீகர் தவான், இரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், அமித் மிஷ்ரா, மொஹமட் ஷமி, சட்டேஸ்வர் புஜாரா, லோகேஷ் ராகுல், ரித்திமான் சகா, இஷாந் ஷர்மா, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ்  .

1k-6-612x336

Related posts: