ஆரம்பமானது தேசிய விளையாட்டு போட்டி!

Wednesday, October 4th, 2017

 

அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில்  ஆரம்பமாகியுள்ளது.

14 நாட்கள் நடைபெறும் இவ் விளையாட்டு போட்டிகளில் 09 மாகாணங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இவ் விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தேசிய கொடியை ஏற்றியும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் விளையாட்டுகொடியை ஏற்றியும் விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

 

மேலும் இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸஹேவிதாதனகே உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள்  பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் போன்றோர் கலந்துக்கொண்டார்கள்.

 

 

Related posts: