ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 3 தலைவர்கள் நியமனம்!

Sunday, April 7th, 2019

ஆப்கானிஸ்தானில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனியான தலைவர்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை  நியமித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய 31 வயதான அஸ்கார் ஆப்கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் ஒரு நாள் போட்டி அணிக்கு சகலதுறை வீரர் குல்படின் நைப் தலைவராகவும், சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குல்படின் நைப் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையில் பங்கேற்க உள்ளது.

டெஸ்ட் அணிக்கு சகலதுறை வீரர் ரமத் ஷாவும், 20 ஓவர் போட்டி அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலக கோப்பை போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்த தலைமைத்துவ மாற்றம் சரியான முடிவு அல்ல, இது பொறுப்பற்ற செயல் என்று அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

Related posts: