ஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
Monday, June 6th, 2016கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ஜோகோவிச் பட்டம் வென்றுள்ளார்.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்– இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் ஆன்டி முர்ரே ஆகியோர் மோதினர்.
முதல் 2 இடத்தில் உள்ள வீரர்கள் மோதுவதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் முர்ரே முன்னிலை வகித்தார்.
அதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜோகோவிச் இரண்டாவது சுற்றை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-2 என்ற கணக்கிலும் வென்றார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன் மூலம் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றவர் பட்டியலில் ஜோகோவிச் இடம் பிடித்துள்ளார்.
ஜோகோவிச் வென்றுள்ள 12-வது கிராண்ட்சிலாம் பட்டம் இது. ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 6 தடவையும், விம்பிள்டன் பட்டத்தை 3 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 2 தடவையும் வென்று உள்ளார்.
ஆன்டிமுர்ரே இதுவரை 2 கிராண்ட்சிலாம் பட்டம் மட்டுமே வென்று இருக்கிறார். 2012–ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும், 2013–ல் விம்பிள்டன் பட்டத்தையும் வென்று இருந்தார்.
இந்த தோல்வியின் மூலம் அவரது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்லும் கனவு பலிக்காமல் போனது.
முன்னதாக நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருஸாவிடம் அதிர்ச்சிகரமாக வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|