ஆசிய பல்கலை அணிகளோடு மோதும் இலங்கை அணியில் யாழ் பல்கலையைச் சேர்ந்த மூவர் !

ஆசிய பல்கலைகழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டிக்கான, இலங்கையை சேர்ந்த பல்கலைக்கழக வீர வீராங்களைகள் எதிர்வரும் 18ம் திகதி தமது சீனப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
2 வது ஆசிய பல்கலைகழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டிக்கு இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தெரிவு செய்யப்பட்ட 16 வீர வீரங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 தர 3 கூடைப்பந்தாட்ட போட்டியில், இலங்கையை சேர்ந்த 16 வீர வீரங்கனைகளில், 3 தமிழ் வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். அத்துடன் குறித்த அணியில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து அபிகரன், துஸ்யந்தி, விதுரா ஆகியயோர் தெரிவாகியுள்ளனர். இதேவேளை, இலங்கை பல்கலைக்கழக அணி, ஆசிய பல்கலைக்கழக அணிகளோடு மோதும் போட்டி, எதிர்வரும் 20ஆம் திகதி சீனாவின் மக்கோவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனையில் ஹேரத் முதலிடத்தில் சாதனை!
மெஸ்ஸியின் சாதனை!
IPL தொடர் - சூதாட்டத்தில் சிக்கிய பரபலங்கள்!
|
|