அவுஸ்திரேலிய – இந்திய தொடர்:  இந்திய அணி வெற்றி!

Sunday, December 30th, 2018

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 137 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 7 விக்கட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 151 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 106 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் 399 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, 261 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் ஊடாக நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, 2 க்கு 1 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

Related posts: