அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி!

Wednesday, November 3rd, 2021

ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஒட்டங்களால் நமீபியா அணியை வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 2 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பிலி் மொஹமட் ரிஷ்வான் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும் அணித்தலைவர் பாபர் அஷாம் 70 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் டேவிட் விஹிஸ் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றுக் கொண்டார். சி. வில்லியம்ஸ் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்த வெற்றியை தொடர்ந்து தொடர்ச்சியாக தான் கலந்து கொண்ட நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று பாகிஸ்தான் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது

000

Related posts: