அமைச்சை என்னிடம் ஒப்படையுங்கள் – அர்ஜூன!

Tuesday, September 19th, 2017

விளையாட்டு துறை அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அண்மை காலங்களில் மிகவும் மோசமான பெறுபேறுகளை பெற்று வருகின்றது.இந்த நிலைலேயே அர்ஜூன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணி பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.அதனை மீட்க உடன் நடடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அணி 1996 ஆம் முதல்முறையாக உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது அந்த அணியின் தலைவராக அர்ஜூன ரணதுங்க செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: