அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை வென்றார் ஜெர்மனியின் அன்ஜெலீக் கெர்பர்.

Sunday, September 11th, 2016

நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதி போட்டியில் ஜெர்மனியின் அன்ஜெலீக் கெர்பர் வென்றுள்ளார்.
தன்னுடைய முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியை விளையாடிய செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிலீஸ்கோவாவோடு நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் இரண்டு செட்டுகளை வென்று இவர் கோப்பையை கைபற்றினார்.
ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்ற பிறகு இவ்வாண்டு அன்ஜெலீக் கெர்பர் வென்றிருக்கும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் போட்டி இதுவாகும். இன்று (ஞயிற்றுக்கிழமை) நடைபெறும் அமெரிக்க ஓபன் ஆடவர் டென்னிஸ் இறுதிப் போட்டியில்.உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கின்ற நோவாக் ஜோகோவிச் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள சுவிஸ்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்த்து ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

160911023330_angelique_kerber_us_open_640x360_getty_nocredit

Related posts: