அணிக்கு பதிலடி கொடுத்த இலங்கை !

Friday, August 16th, 2019

காலேவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, காலேவில் தொடங்கிய முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து 249 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 86 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை அணி தரப்பில் அகில தனஞ்செய 5 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

திரிமன்னே 10 ஓட்டங்களிலேயே வெளியேற, கருணரத்னே மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் score 66 ஆக இருந்தபோது கருணரத்னே 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடிய மெண்டிஸ் அரைசதம் அடித்தார். ஆனால், அவர் 53 ஓட்டங்களை எட்டியபோது அஜஸ் படேல் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர், படேலின் சுழலில் இலங்கை அணி சிக்கியது. மேத்யூஸ் (50), தனஞ்செய டி சில்வா (5) ஆகியோர் அவரது பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நிரோஷன் டிக்வெல்ல நங்கூரம் நின்று ஆடினார்.

நேற்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிக்வெல்ல 39 ஓட்டங்களுடனும், லக்மல் 28 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் அஜஸ் படேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts: